கொரோனாவிலிருந்து மீண்ட முதிய தம்பதியை கவனித்துக்கொண்ட நர்சுக்கு வைரஸ் தொற்று

0 3045

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 93 வயது மற்றும் 88 வயதான முதிய தம்பதியினர், குணமடைந்துள்ளனர்.

இத்தாலியில் இருந்து திரும்பிய பிள்ளைகள் மற்றும் பேரன்-பேத்திகளிடமிருந்து இந்த முதிய தம்பதிக்கு கொரோனா தொற்றியுள்ளது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் வயது மூப்பு காரணமாக வரக்கூடிய பிற நோய்கள், இந்த முதிய தம்பதிக்கு இருந்துள்ளது. கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தம்பதிக்கு கடுமையான இருமல், நெஞ்சுவலி, சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்த நிலையில், வென்டிலேட்டர் சுவாச உதவி வழங்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்குப் பிறகு முதிய தம்பதி உட்பட அந்த குடும்பத்தினர் அனைவரும் குணமாகி விட்டதாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா  தெரிவித்துள்ளார். முதிய தம்பதியை கிட்டத்தட்ட மரணத்தில் இருந்து மீட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேசமயம், அந்த முதிய தம்பதிதை தங்களது குடும்பத்தினரை போல பார்த்துக் கொண்ட நர்ஸ் ஒருவருக்கு கொரோனா தொற்றியதுதான் சோகம். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments