வென்டிலேட்டர்கள் தயாரிக்க மோட்டார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு
கொரோனா பாதிப்புகளை தடுக்க வென்டிலேட்டர்களை தயாரிக்குமாறு மோட்டார் நிறுவனங்களை மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் கடுமையான சுவாச நோய் அறிகுறிகள் ஏற்படும்போது எதிர்கொள்ள அதிக அளவில் வென்டிலேட்டர்கள் தேவைப்படும். இதனால் குறுகிய காலத்தில் அதிக வென்டிலேட்டர்களை தயாரிக்க வேண்டிய சூழலைக் கருதி மோட்டார் நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்பை கையிலெடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2 மாதங்களில் 30,000 வென்டிலேட்டர்களை தயாரிக்க பெல் நிறுவனத்திடமும் மொத்தம் 10,000 வென்டிலேட்டர்களை தயாரிக்க நொய்டாவில் உள்ள அக்வா ஹெல்த் கேர் நிறுவனத்திடமும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச ஹாமில்டன், மின்ட்ரே, டிரெகர் நிறுவனங்கள் மற்றும் சீனாவையும் வென்டிலேட்டர்களை தயாரித்துத் தரக் கோரி அணுகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டி.ஆர்.டி.ஓ. நாள்தோறும் 20,000 முக கவசங்கள் தயாரிக்கும் பணியை அடுத்த வாரம் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments