பிரதமரின் கொரோனா அவசரகால நிதிக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை சார்பில் ரூ.1031.29 கோடி நன்கொடை
பிரதமரின் கொரோனா அவசரகால நிதிக்கு பலவேறு தரப்புகளில் இருந்தும் நன்கொடைகள் வந்த வண்ணம் உள்ளன.
எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை சார்பில் ஆயிரத்து 31 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்படும் என்று பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
இது தவிர பொதுத்துறை எண்ணெய் நிறுவன ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத் தொகையான 61 கோடி ரூபாயை பிரதமரின் நிதிக்கு வழங்க முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
பிரதமரின் கொரோனா அவசரகால நிதிக்கு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் சார்பில் 500 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்படும் என அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளின் ஆசிரியர்களும், இதர ஊழியர்களும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை பிரதமரின் நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
Comments