அவசர தேவைகளுக்காக பிற மாவட்டத்துக்கு செல்ல தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி அறிவிப்பு

0 4636

தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்காக சென்னையிலிருந்து வெளியூர் செல்ல விரும்புவோருக்கான தகவல் தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள தற்காலிக கட்டுப்பாட்டறை செல்போன் எண்ணான 7530001100 என்ற எண்ணை தொடர்புகொண்டோ, குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்ஆப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

gcpcorona2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் திருமணம், இறப்பு, மருத்துவம் மற்றும் தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்காக மட்டுமே தொடர்புகொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அவசர தேவைகளுக்காக ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல விரும்புவோர், சென்னை, மயிலாப்பூர், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள தற்காலிக கட்டுப்பாட்டறைக்கு ccwtnpolice@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கைகளை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments