ஊரடங்கு அமலில் வெளியே செல்ல எங்கே அனுமதி சீட்டு வாங்க வேண்டும்?

0 12869

ஊரடங்கு அமலில் உள்ள போது, அவசர தேவை கருதி வெளியே செல்வோர்களுக்கு, யார் அனுமதி சீட்டு விநியோகிப்பார்கள்? என்ற விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

திருமணம், இறுதிச் சடங்குகள், உடல் நலக் குறைவு தொடர்பாக அவரவர் வசிக்கும் பகுதிகளுக்கோ அல்லது வெளியூர்களுக்கோ செல்ல நேரிடும் போது அனுமதி சீட்டு பெற வேண்டும்.

இதன்படி, சென்னையில் மாநகராட்சியும், இதர மாவட்டங்களில் வருவாய்த்துறையும் இப்பணியை மேற்கொள்ளும். குறிப்பிட்ட மாவட்டத்துக்குள் பயணிக்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட நபர் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

சென்னை மாநகராட்சிப் பகுதியாக இருந்தால் மண்டல அலுவலர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதுகுறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments