சீனாவில் 97 சதவீதம் தொழில் நிறுவனங்கள் இயங்கத் துவங்கின
கொரோனாவின் ஊற்றுக்கண்ணான சீனாவின் ஊகான் நகரில் 2 மாத இடைவேளைக்குப் பிறகு ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டதாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷாப்பிங் மால்களுக்கு வருபவர்களின் உடல்நிலையை நுழைவாயில்களிலேயே ஸ்கேன் செய்து திருப்திகரமானது என உறுதி செய்தபின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிலையில் சீனாவில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்களில் சுமார் 97 சதவிகிதம் மீண்டும் இயங்கத் துவங்கி விட்டதாகவும், 90 சதவிகித பணியாளர்கள் பணிக்குத் திரும்பி விட்டதாகவும் சீனாவின் தொழில்துறை துணை அமைச்சர் ஜின் கவுபின் (Xin Goubin) தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் அமெரிக்கா ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில், சீனா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments