ஊரடங்கை கடைபிடிக்காதவர்களுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமை சிறை - அமைச்சர் எச்சரிக்கை

0 3192

தேவை இன்றி, சாலைகளில் சுற்றி திரிந்தால், 14 நாட்கள் கட்டாய தனிமை சிறையில் வைக்கப்படுவார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

சென்னை - மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கை கடைபிடிக்காதவர்கள் சமுதாயத்திற்கு எதிரானவர்கள் என்றார்.

வெளி மாநிலத்தில் இருந்து வந்து தங்கி பணியாற்றுபவர்களை யாராவது விரட்டி அடித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளில் பொருட்களை, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் வியாபாரிகள் மீது நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments