உடுமலை ஜிவிஜி குழுமம் சார்பில் ரூ. 1 கோடி நிதி அமைச்சரிடம் வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்ட எல்லைகளில் 41 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு மருத்துவர், சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழு கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார்.
அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உடுமலைப்பேட்டை ஜிவிஜி குழுமம் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை அமைச்சரிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்து சென்ற அமைச்சர், சாலைகளில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து போலீசாருக்கு கிருமிநாசினிகளை வழங்கினார்.
Comments