144 தடை உத்தரவை மீறியதற்காக தமிழகம் முழுவதும் 22,906 பேர் கைது

0 2756

144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் விதிமீறல்களில் ஈடுபட்ட 22 ஆயிரத்து 906 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவசர தேவைக்களுக்காக அல்லாமல் வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 25ம் தேதி முதல் தற்போது வரை சென்னையில் மட்டும், ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

650 வாகனங்களையும் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அதே போல் தமிழகம் முழுவதும் 19 ஆயிரத்து 637 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 22 ஆயிரத்து 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விதிமீறல்களில் ஈடுபட்ட 15 ஆயிரத்து 129 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments