அவசர பயண அனுமதி பெறுவது தொடர்பாக காவல் ஆணையர் விளக்கம்

0 6554

அவசர காரணங்களுக்காக பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், டிஜிபி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வருவதற்கும், வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கும் ccwtnpolice@gmail.com என்ற இமெயிலில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஒவ்வொரு விண்ணப்பத்தின் உண்மை தன்மையை விசாரித்தபின்னரே பாஸ் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் அதற்கு செல்வதற்காகவும், குடும்பத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் கலந்து கொள்வதற்கும், மருத்துவ அவசர தேவைகளுக்காகவும் அனுமதி வழங்கப்படுகிறது என்று ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments