தொழிலாளர்களுக்கு வேதிக்கரைசல் குளியல்- நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு..!
உத்தரப்பிரதேசத்தில் வெளியூரில் இருந்து திரும்பிய தொழிலாளர்களை வேதிக்கரைசலால் குளிப்பாட்டியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
டெல்லியில் இருந்து பரேய்லிக்கு வந்த தொழிலாளர்கள் மீது சோடியம் ஹைப்போகுளோரைட் கலந்த நீரைத் தெளித்துக் குளிப்பாட்டியுள்ளனர்.
இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியதால் அதிகாரிகளின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தரையைக் கழுவப் பயன்படும் இந்த வேதிப்பொருள் தோல்மீது பட்டால் கடும் எரிச்சலையும், ஊரலையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படியே சோடியம் ஹைப்போகுளோரைட் கலந்த நீரைத் தெளித்துக் குளிப்பாட்டியதாகத் தீயணைப்புத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் பரிசோதனை செய்யவே தான் அறிவுறுத்தியதாகவும், வேதிப்பொருளால் குளிப்பாட்டியது தனக்குத் தெரியாது என்றும் பரேய்லி மாவட்ட ஆட்சியர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Comments