சென்னையில் 9 பகுதிகளில் கொரோனா பரவ அதிக வாய்ப்பு

0 4502

சென்னையில் அரும்பாக்கம், கோட்டூர்புரம் உள்ளிட்ட 9 பகுதிகள், கொரோனா பரவ அதிகம் வாய்ப்புள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் வசித்த பகுதிகள் பட்டியலிடப்பட்டன. அந்த வகையில், அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம் , சாந்தோம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் ,போரூர், ஆலந்தூர் மற்றும் கோட்டூர்புரம் ஆகிய 9 பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே கொரோனா பாதித்துள்ளது கண்டறியப்பட்டது.

இந்த பகுதிகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, உஷார் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையின்றி வீடுகளைவிட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதாரத்தை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments