தொழிலாளர்களிடம் ஒரு மாத வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது - மத்திய அரசு உத்தரவு
ஊரடங்கு உத்தரவையொட்டி தொழிலாளர்களிடம் ஒரு மாதத்துக்கான வீட்டு வாடகையை உரிமையாளர்கள் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சக செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையில், வாடகைக்கு இருக்கும் புலம் பெயர்ந்த வெளிமாநிலத்தவர்கள், தொழிலாளர்கள், மாணவர்களை வலுகட்டாயமாக வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்ற கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களின் சம்பளத்தில் எந்த பிடித்தமும் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவற்றை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் வெளிமாநில தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களுக்கு உணவு, இருப்பிட வசதியை உறுதி செய்யவும் மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
Comments