வாட்சப்பில் வீடியோக்களை ஸ்டேட்டஸ் வைப்பதற்கான நேரம் குறைப்பு
இண்டர்நெட் வேகக் குறைப்பாட்டை சமாளிக்கும் வகையில் இந்தியாவில் வாட்சப்பில் வீடியோக்களை ஸ்டேட்டஸ் வைப்பதற்கான நேரம் 30 விநாடிகளில் இருந்து 15 விநாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் இண்டர்நெட் வேகக் குறைப்பாட்டை தவிர்ப்பதற்காக, நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், யூட்யூப், பேஸ்புக் உள்ளிட்டவை, தங்கள் வீடியோ ஸ்ட்ரீமிங் தரத்தை குறைத்துள்ளன.
இந்நிலையில் அதே காரணத்திற்காக வாட்சப்பில் வீடியோக்களை ஸ்டேட்டஸ் வைக்கும் நேரமும் 15 விநாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
Comments