நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை வாங்க காத்திருந்த மக்கள்

0 3400

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்துவதற்காக சித்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கபசுர குடிநீர் சூரணம் சென்னை அரும்பாக்கத்தில் விநியோகிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் தொற்று நோய்களை எதிர்க்கொள்ள சுபகர குடிநீரை பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

அதன்பேரில், அரும்பாகத்தில் உள்ள தமிழக அரசு நிறுவனமான டாம்ப்கால் அலுவலகத்தில் சுபகர குடிநீர் சூரணம் விநியோகிக்கப்பட்டது.

100கிராம் அளவு கொண்ட ஒரு பாக்கெட் சூரணம் நூற்று ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு ஸ்பூன் சூரணத்தை 2 டம்பளர் தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து அது 50 மில்லி ஆன பிறகு தினமும் காலை வெறும் வயிற்றில் அருந்த வேண்டுமென கூறப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments