கடைகள் திறக்க நேரக் கட்டுப்பாடு - மீதமாகும் பாலை தரையில் ஊற்றும் பால் விற்பனையாளர்கள்

0 2424

சென்னையில் உள்ள மாட்டுப் பண்ணைகளில் கொள்முதல் செய்யப்படும் பாலை விற்க முடியாததால் மீதிப் பாலை வீணாகத் தரையில் ஊற்றி வருவதாகப் பால் விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மந்தைவெளி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட பசுமாடுகளை வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.

இவர்களிடம் ஒரு நாளைக்கு மொத்தம் 20 ஆயிரம் லிட்டர் பாலைக் கொள்முதல் செய்யும் தனியார் பண்ணைப் பால் விற்பனையாளர்கள் தேநீர்க்கடைகள், இனிப்பகங்கள், உணவகங்கள், பொதுமக்களுக்கு விற்று வந்தனர்.

ஊரடங்கால் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் இப்போது பாலை முழுவதும் விற்க முடியவில்லை என்றும், அதனால் மீதிப் பாலை வீணாகத் தரையில் ஊற்றுவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தங்களுக்கு நட்டமும் வாழ்வாதாரப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாகப் பால் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments