அரசு வாகனம் - ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

0 3302

புதுச்சேரியில் காரும் ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், அரசு பயிற்சி பெண் மருத்துவர், காரின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியில் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டைச் சேர்ந்த பாலமுருகன் தனது பெற்றோருடன் ஆம்புலன்ஸ் ஒன்றில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நோக்கிச் சென்றுள்ளார். கிருமாம்பாக்கம் காவல்நிலையம் எதிரே புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி அரசு பெண் பயிற்சி மருத்துவர் சீதாகுமாரி என்பவர் வந்த காருடன் ஆம்புலன்ஸ் பயங்கரமாக மோதியது.

இதில் மருத்துவர் சீதாகுமாரி, காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு அதன் பேனட்டின் மீது விழுந்தார். அப்பளமாக நொறுங்கிய ஆம்புலன்சை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அருகிலிருந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து விசாரித்து வருகின்றனர். பெண் மருத்துவர் சீட் பெல்ட் அணியாமல் வந்ததே, அவர் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே விழக் காரணம் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments