பஞ்சாபில் சிக்கித் தவித்த மலேசிய நாட்டவர்கள்: சிறப்பு விமானம் மூலம் மலேசியா புறப்பட்டுச் சென்றனர்

0 863

பஞ்சாபில் சிக்கித் தவித்த மலேசிய நாட்டவர் 180 பேர் அமிர்தசரசில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மலேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

மலேசியாவில் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினர் 180 பேர் பஞ்சாபில் உள்ள தங்கள் உறவினர்களைப் பார்க்கவும், பல்வேறு சுற்றுலாத் தலங்களைப் பார்க்கவும் மார்ச் 7ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தனர்.

அவர்கள் மார்ச் 21ஆம் தேதி திரும்பிச் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் பன்னாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் அமிர்தசரசில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மலேசிய அரசு ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் 180 பேரும் இன்று புறப்பட்டுச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments