வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்
வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தும் பொருட்களை டெட்டால் உள்ளிட்ட கிருமி நாசினியை கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நோய்த்தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் அதிநவீன இயந்திரம் மற்றும் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, பொதுமக்கள் அனைவரும் வீடுகளின் வெளிப்புற கதவு, கைப்பிடி, டி.வி. ரிமோட்டு, செல்போன், மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தும் கீ போர்டு (Key Board) இருசக்கர வாகன கைபிடிகள் ஆகியவற்றை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேற்கண்டவற்றை டெட்டால் போன்ற கிருமி நாசினியை சிறிதளவு தண்ணீரில் கலந்து சுத்தம் செய்து கொள்ளலாம் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
Comments