மத்தியப் பிரதேசத்தில் தண்டனைக் கைதிகள் 5000 பேர் பரோலில் விடுவிப்பு
கொரோனா அச்சத்தால் மத்தியப் பிரதேச அரசு தண்டனைக் கைதிகள் ஐயாயிரம் பேரை 2 மாதப் பரோலில் விடுவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகள், ஏழாண்டுக்கும் குறைவாகச் சிறைத் தண்டனை பெற்ற கைதிகள் ஆகியோரைப் பரோலில் விடுவிக்குமாறு மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
அதன்படி மத்தியப் பிரதேசத்தில் ஏழாண்டுக்கும் குறைவான காலம் சிறைத் தண்டனை பெற்ற ஐயாயிரம் கைதிகள் இரண்டு மாதப் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளனர். விசாரணைக் கைதிகள் மூவாயிரம் பேர் ஒன்றரை மாதக் கால இடைக்கால ஜாமீனில் அடுத்த இரு நாட்களில் விடுவிக்கப்பட உள்ளதாகவும் மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
Comments