கொரோனா தடுப்பு, நிவாரண உதவிகளுக்காக, திமுக ரூ.1 கோடி நிதி

0 2979

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடினார்.

கொரோனா நிலவரம், அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனரா, களப்பணியாளர்களுக்கு மாஸ்க், சானிடைசர் கிடைக்கின்றனவா, கண்காணிப்பு ஏற்பாடுகள், புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை போன்றவை குறித்து கேட்டறிந்தார்.

இதனிடையே, கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக தி.மு.க. அறக்கட்டளை சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட நிதி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments