தடை உத்தரவு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது

0 7811

தமிழகத்தில் மதுபான கடைகள் ஏப்ரல் 14-ந் தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும் என அதன் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 23-ம் தேதி மாலையுடன் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில், வருகிற 31-ம் தேதியில் இருந்து நேரக் கட்டுப்பாடுடன் டாஸ்மாக் கடைகள் இயங்கும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமார், ஏற்கனவே அறிவித்தபடி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் தடை உத்தரவு முடியும் வரை மூடப்பட்டு தான் இருக்கும் என கூறியுள்ளார்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments