அமெரிக்காவில் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு
அமெரிக்காவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான சமூக விலகல் விதிமுறைகள் ஏப்ரல் 30ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் இரண்டாயிரத்து நானூற்றைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில் வாஷிங்டனில பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா பரவலைத் தடுப்பதற்கான சமூக விலகல் விதிமுறைகள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்தார். முழு அடைப்பால் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பொழுதுபோக்குக்காகவும், உணவுக்காகவும் நிறுவனங்கள் செலவிடும் தொகைக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
முகமூடிகள், கையுறைகள், சுவாசக் கருவிகள், கிருமிநாசினிகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அவற்றைப் பதுக்கி வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
— Donald J. Trump (@realDonaldTrump) March 29, 2020
Comments