சுய தனிமைப்படுத்தலை நீட்டித்துக் கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது மனைவி குணம் பெற்ற போதும், சுய தனிமைப்படுத்தலை நீட்டித்துக் கொண்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார்.
ஒன்டாரியோ மாகாணத்தின் ஹாரிங்டனில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 16 ஆம் தேதி முதல் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள ஜஸ்டின் ட்ருடோ, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மேலும் 14 நாட்களுக்கு செல்போன் மற்றும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக தனது பணிகளை தொடரப்போவதாக அறிவித்தார்.
தனக்கு நோய் அறிகுறி இல்லை என்ற போதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மனைவியுடன் ஒரே வீட்டில் இருந்ததால் மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று தனிமைப்படுத்தலை நீட்டித்துக் கொண்டுள்ளதாக ட்ரூடோ தெரிவித்தார்.
It doesn’t matter how we meet, the PM’s Youth Council is always ready to get to work. Thanks for sharing your thoughts on fighting COVID-19 - I’m counting on you, and all young people, to use your voices and remind others how important physical distancing is. You’ve got this. https://t.co/u1LEkQBE2p
— Justin Trudeau (@JustinTrudeau) March 29, 2020
Comments