அமைப்பு சாரா தொழிலாளர்களின் இன்னல்கள் தொடர்பான மனுக்கள் இன்று விசாரணை
ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்த தொழிலாளர்கள் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று ஊரடங்குக்கு இடையிலும் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
புலம் பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் கையறு நிலையையும் மனிதாபிமானமற்ற முறையில் அவர்கள் குடும்பத்தினருடனும் குழந்தைகளுடனும் பலநூறு கிலோமீட்டர் நடந்து செல்வதையும் குறித்து கவலை எழுப்பி பல்வேறு பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.முதியோர், நோய்வாய்ப்பட்டோர் போன்றவர்களும் கடும் வேதனைகளுக்கு ஆளானதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர், போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற எந்த வித வசதிகளையும் மத்திய மாநில அரசுகள் செய்து தரவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments