கருணைக் கொலை செய்யப்பட்ட அம்பிகா யானை
அமெரிக்காவில் 72 வயதான இந்திய யானை உடல் நலம் குன்றியதால் கருணைக் கொலை செய்ப்பட்டது.
வாஷிங்டன் ஸ்மித்சோனியன் தேசிய விலங்கியல் பூங்காவில் அம்பிகா என்ற யானை வளர்க்கப்பட்டு வந்தது. கூர்க் வனப்பகுதியில் பிடிக்கப்பட்ட இந்த யானை 1961ம் ஆண்டு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்காவில் வாழ்ந்த மூன்றாவது வயதான யானை என்ற பெயரையும் அம்பிகா பெற்றிருந்தது. இந்நிலையில் வயதான காரணத்தால் முன்னங்கால் வளைந்து யானையின் உடல் நிலை மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து ஊசி மூலம் அம்பிகா கருணைக் கொலை செய்யப்பட்டதாக விலங்கியல் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். யானை உயிரிழந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரஞ்சித் சிங் சந்தூவும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். உலகில் அதிகம் ஆய்வு செய்யப்பட்ட யானைகளில் அம்பிகாவும் ஒன்றாகும்.
Comments