கடும் பொருளாதார வீழ்ச்சியால் தற்கொலை செய்து கொண்ட ஜெர்மனியின் நிதியமைச்சர்
பொருளாதார வீழ்ச்சியால் மனமுடைந்த ஜெர்மனியின் மாநில நிதியமைச்சர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அங்குள்ள ஹெய்சி என்ற மாநிலத்தின் நிதியமைச்சராக இருந்தவர் தாமஸ் ஸ்கிபெர். கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்த இவர், கொரோனா பாதிப்பால் தனது மாநிலத்தின் பொருளதார நிலைமை மோசமானதைக் கண்டு மனமுடைந்து காணப்பட்டார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர், பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து அப்பகுதி ஆளுநருடன் அடிக்கடி விவாதித்து வந்தார். இந்நிலையில் தனது முயற்சிகள் பலனளிக்காமல் போனதால் மனமுடைந்த அவர், ஹோச்ஹெய்மில் என்ற இடத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
Comments