கொரோனா அவசரகால நிதி : ராணுவம் சார்பில் ரூ.500 கோடி நன்கொடை
பிரதமர் அறிவித்த கொரோனா அவசரகால நிதிக்கு பலவேறு தரப்புகளில் இருந்தும் நிதி குவிந்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில், முப்படை வீர ர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சக ஊழியர்களின்ஒரு நாள் ஊதியமான சுமார் 500 கோடி ரூபாய் இந்த நிதிக்கு வழங்கப்படுவதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். அத்துடன் தமது ஒரு மாத சம்பளத்தையும் பிரதமர் நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளார். கூடுதலாக, தமது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் பிரதமர் நிதிக்கு விடுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இந்த நிதிக்கு தங்களால் ஆன பங்களிப்பை செய்யுமாறும் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
I have decided to donate my one month salary to the PM-CARES fund. You can also contribute in this fund and strengthen India’s resolve to fight against the menace of COVID-19.
— Rajnath Singh (@rajnathsingh) March 29, 2020
I have also asked the Chairman MPLADS, to release Rs 1 crore from my MPLADS fund to this fund.
Comments