2 உலகப் போர்களையும் ஸ்பானிஷ் புளூவையும் கடந்து வாழ்ந்தவர் கொரோனாவுக்கு பலி

0 14709

கொரோனாவுக்கு பலியான உலகிலேயே அதிக வயது நோயாளி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரிட்டனின் சால்போர்டு நகரத்தைச் சேரந்த (Salford city) 108 வயதான ஹில்டா சர்ச்சில் (Hilda Churchill) என்ற பெண்மணி, கொரோனா தாக்கி உயிரிழந்ததாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் 5 ஆம் தேதி அவருக்கு 108 ஆவது பிறந்த நாள் வரும் நிலையில் கடந்த செவ்வாய் அன்று அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதியானது. அதற்குப் பின் 24 மணி நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு உலகப்போர்களையும், 1918 ல் வெடித்த ஸ்பானிஷ் புளூவையும் கடந்து உயிர் வாழ்ந்த இந்தப் பெண்மணி கொரோனாவுக்கு பலியாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments