spice jet நிறுவன விமானிக்கு கொரோனா தொற்று உறுதி

0 5528

ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானி ஒருவருக்கு கொரோனா தொற்று நோய் உறுதியாகியுள்ளது.

அந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தை சென்னையில் இருந்து டெல்லிக்கு கடந்த 21ம் தேதி ஓட்டிய விமானிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவருடன் விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்டோரை 14 நாள்கள் சுயதனிமையில் இருக்கும்படி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய அரசின் வழிகாட்டுதல்களை தங்களது நிறுவனம் தீவிரமாக பின்பற்றுவதாகவும், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு தங்களது நிறுவனம் அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments