அத்தியாவசிய தேவையின்றி சுற்றிதிரிபவர்களின் இருசக்கர வாகனம் பறிமுதல்

0 1153

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சென்னையில் அத்தியாவசிய தேவையின்றி சாலைகளில் செல்லும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவாத வகையில் பொதுமக்கள் வீட்டிக்குள்ளேயே இருக்குமாறு அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அலட்சியத்துடன் வெளியில் சுற்றி திரிவோரை மடக்கி பிடித்த பல்வேறு நூதன தண்டனைகளை போலீசார் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை அண்ணா நகர் ரவுண்டானாவில் தேவையற்ற காரணங்களுக்காக சாலையில் சென்றவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். முறையான ஆவணங்கள் இருந்தாலும் இரவு 7 மணிக்கு பிறகு தான் இருசக்கர வாகனம் திருப்பித்தரப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments