கொரோனா தடுப்பு பணிக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவி..!
கொரோனா தடுப்பு பணிக்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே 10 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், கொரானா தடுப்பு பணிக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும், மகாராஷ்டிர முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும் அளித்தார்.
இதையடுத்து சுரேஷ் ரெய்னா, பிரதமர் நிவாரண நிதிக்கு 31 லட்சம் ரூபாயும், உத்தர பிரதேச முதலமைச்சர் நிவாண நிதிக்கு 21 லட்சம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்தார்.
இந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிரா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு டெஸ்ட் அணி துணை கேப்டன் ரஹானே, 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.
Comments