ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை
ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
சென்னையில் ஊரடங்கு மீறல் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் கண்காணித்து வருவதாகத் தெரிவித்த அவர், ஊரடங்கை மீறி பொது இடங்களில் கூட்டம் சேருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து வந்த 20 ஆயிரத்து 240 பேர் வீட்டுத் தனிமையில் கண்காணிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 1,120 பேர் 28 நாள் கண்காணிப்புக் காலத்தை நிறைவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். 19 ஆயிரத்து 120 பேர் இன்னும் தனிமைக் கண்காணிப்பில் இருப்பதாகவும், அக்கம்பக்கத்தினர் அவர்களுடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Comments