கொரோனா பெருமளவில் பரவும் அபாயம்
டெல்லியில் பேருந்து நிலையங்கள், சாலைகளில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் கூட்டமாகக் கூடியுள்ளதால் கொரோனா வைரஸ் பெருமளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியிலும் புறநகர்ப் பகுதிகளிலும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வந்தனர்.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், வேலையிழந்த தொழிலாளர்கள் ஊருக்குச் செல்வதற்காகச் சாலை வழியே நடந்து செல்கின்றனர்.
இதனால் தொழிலாளர்களின் வசதிக்காக உத்தரப்பிரதேச மாநில அரசு ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்தது. இந்தப் பேருந்துகளில் செல்வதற்காக டெல்லி ஆனந்த் விகார், நொய்டா, காசியாபாத் ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்துள்ளனர்.
இவர்களில் ஒருவருக்குக் கொரோனா இருந்தால் கூடச் சமுதாயப் பரவல் முறையில் லட்சக்கணக்கானோருக்குப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Comments