பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சீனா மருத்துவ உதவி

0 9307

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1500ஐ தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பாகிஸ்தான், அண்டை நாடுகளின் எல்லைகளை மூடியுள்ளது.

அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1500ஐ தாண்டியுள்ளது.

இதனிடையே 1 லட்சம் மாஸ்க்குகள், கவச உடைகள், பரிசோதனை கருவிகள் உட்பட சுமார் 5.4 டன்கள் அளவிலான மருத்துவ உபகரணங்கள் சீனாவிலிருந்து பாகிஸ்தான் வந்தடைந்தன.

மேலும் 8 நிபுணர்கள் அடங்கிய சீன மருத்துவக் குழுவினரும் இஸ்லாமாபாத் வந்தடைந்தனர். பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments