பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி நகரும் காய்கறிக் கடைகள் அறிமுகம்
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், விவசாயிகளின் நன்மைக்காக நகரும் காய்கறிக் கடைகளை ஆந்திர மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை விற்கும் கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும் மக்கள் கூட்டமாகச் சென்று பொருட்களை வாங்கும் நிலை உள்ளது.
இதைத் தவிர்க்கவும் உழவர்களின் வசதிக்காகவும் நகரும் காய்கறிக் கடைகளை ஆந்திர மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்படி, உழவர்கள் விளைவித்த காய்கறிகளைச் சிறிய சரக்கு ஊர்திகளில் ஏற்றிக் கொண்டு தெருத்தெருவாகச் சென்று மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
முதற்கட்டமாக இந்தத் திட்டம் ஒடிசா மாநிலத்தை ஒட்டிய சிறீகாக்குளம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Comments