டெல்லி-ஆக்ரா சாலையில் நெஞ்சுவலியால் இளைஞர் உயிரிழப்பு
டெல்லியில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தனது ஊருக்கு நடந்து சென்ற ரன்வீர் சிங் என்பவர், வழியிலே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
திடீரென நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் பிழைப்புக்காக புலம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ரயில் ,பேருந்து கிடைக்காமல் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் உணவகத்தில் பணிபுரிந்து வந்த 38 வயதான ரன்வீர் சிங் என்பவர் உணவகங்கள் மூடப்பட்டதால் சனிக்கிழமை காலை டெல்லி-ஆக்ரா நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.
அவர் மத்தியப் பிரதேசம் மொரனா மாவட்டத்துக்கு நடந்தே செல்ல திட்டமிட்டார். ஆனால் அவர் நெஞ்சு வலியால் சாலையில் சுருண்டு விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Comments