கொரோனாவின் தாயகமான ஹூபேயில் வன்முறை வெடித்தது

0 10485

சீனாவில் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளது.

கொரோனா வைரசின் மையமாக திகழ்ந்த ஹூபே மாகாணத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் 2 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

மக்கள் வெளியில் நடமாடத் தொடங்கி உள்ளனர். பேருந்து போக்குவரத்தும் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், ஹூபே மாகாணத்தில் இருந்து பொதுமக்கள் சாரை சாரையாக வெளியேற முயற்சி செய்வதால் புதிய பிரச்சனை கிளம்பி உள்ளது.

பேருந்துகளிலும், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.போலீசார் தடுப்பதால் வன்முறை வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எல்லையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, சாலைகளை திறந்து வெளி மாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்கும்படி மக்கள் வலியுறுத்துவதால் பிரச்சனை வெடித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments