கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிசிசிஐ தரப்பில் நிதியுதவி
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அவசரகால நிதியாக பிசிசிஐ தரப்பில் 51 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மீட்புப்பணிகளுக்கான நிதியை சேர்க்க PM-CARES என்ற கணக்கை துவங்குவதாகவும், முடிந்தவரை மக்கள் முன்வந்து உதவ வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
NEWS : BCCI to contribute INR 51 crores to Prime Minister @narendramodi ji's Citizen Assistance and Relief in Emergency Situations Fund
— BCCI (@BCCI) March 28, 2020
More details here - https://t.co/kw1yVhOO5o pic.twitter.com/RJO2br2BAo
இந்நிலையில், கொரானாவை எதிர்த்துப் போராடுவதற்கும், இந்திய குடிமக்களைப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும், மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் இணைந்து தங்களின் பங்களிப்பை வழங்குவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Comments