கொரோனா: 10 மாவட்டங்களில் வீடு வீடாக ஆய்வு செய்ய குழுக்கள்
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் சார்ந்த 10 மாவட்டங்களில் இன்று முதல் வீடு வீடாக ஆய்வு நடத்தப்படும் என, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை, டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, குமரி, ஈரோடு. சேலம், கோவை, நெல்லை, வேலூர். காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 42 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து, அவர்கள் இருக்கக்கூடிய இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவை ‘கன்டெய்ன்மெண்ட்’ மண்டலமாக அடையாளப்படுத்தி, அங்கு நோய்தடுப்பிற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை சிறப்பு குழுக்கள் மூலம் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments