ஊரடங்கு உத்தரவால் தடுமாறும் குடியிருப்பு பாதுகாவலர்கள்
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் பணியாற்றும் காவலாளிகள் தங்களுக்கு போதிய பாதுகாப்பில்லை என்று கூறியுள்ளனர்.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் பணியாற்றும் தனியார் காவலாளிகள், கொரோனாவிலிருந்து பாதுகாக்க தங்களுக்கு போதிய பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர்.
போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதால் தங்களால் வீட்டுக்குக் கூட செல்லமுடியவில்லை என்று கூறும் அவர்கள், உணவுக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் குடியிருப்பு நலச் சங்கத்தினரிடம் தாங்கள் கோரிக்கையை முன்வைத்தால் வேலையிலிருந்து நீக்கி விடுவதாக மிரட்டுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Comments