அரசுக்கு உதவுமாறு எம்.பிக்களுக்கு துணைக் குடியரசுத்தலைவர் கோரிக்கை
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக எம்.பிக்கள் அனைவரும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, குறைந்தது 1 கோடி ரூபாயை வழங்க வேண்டுமென துணை குடியரசுத்தலைவர் வெங்கைய்ய நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா சிகிச்சைக்காக இந்திய அரசாங்கம் பல்வேறு ஆதாரங்கள் மூலம் நிதியை சேகரித்து வருகிறது.
இந்நிலையில் சூழலை உணர்ந்து எம்.பிக்கள் உடனடியாக நிதி அளித்து உதவினால், கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வெங்கைய்ய நாயுடு தனது ஒரு மாத சம்பளத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments