உணவு, தங்குமிட வசதி கோரி சாலை மறியல் முயற்சி - போலீசார் தடியடி
கோவையில் தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகள் கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சுந்தராபுரம் பகுதியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள், தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அவற்றை நிறைவேற்றித் தரும்படி அவர்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் தடியடி நடத்தினர்.
Comments