ஊரடங்கால் மருந்தகங்களுக்கு மருந்துகள் வருவதில் சிக்கல்
ஊரடங்கால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் மற்றும் தனியார் மருந்தகங்களுக்கு மருந்துப் பொருட்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் மருந்தகங்களில் 40 சதவீத மானிய விலையில் விற்கப்படுவதால் இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இரத்தக்கொதிப்பு நோயாளிகள், பக்கவாத நோயாளிகள் உள்ளிட்டோர் பயனடைகின்றனர்.
நாகர்கோவில் தக்கலை மார்த்தாண்டம் உள்ளிட்ட 10 இடங்களில் செயல்பட்டு வரும் மக்கள் மருந்தகங்கள் மற்றும் தனியார் மருந்தகங்கள் சென்னையில் இருந்து பார்சல் சேவை, கொரியர் உள்ளிட்டவை மூலமே மருந்து வினியோகத்தைப் பெறுகின்றன.
ஊரடங்கால் அவை மூடப்பட்டுள்ள நிலையில் மருந்துகள் வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Comments