உ.பி-ல் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக 1000 பேருந்துகள் ஏற்பாடு
உத்தரப்பிரதேசத்தில் எல்லைப்புற மாவட்டங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக ஆயிரம் பேருந்துகளை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
டெல்லி, அரியானா மாநிலங்களில் தொழிற்சாலைகளிலும் கட்டுமான நிறுவனங்களிலும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வந்தனர்.
ஊரடங்கால் வேலையிழந்த அவர்கள் போக்குவரத்து முடங்கியதால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் ஒருவாரக் காலமாகத் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கால்நடையாகவே நடந்து நொய்டா, காசியாபாத் நகரங்களுக்குச் சென்றனர்.
அங்கிருந்து அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக லக்னோ, கான்பூர், வாரணாசி, கோரக்பூர், ஆசம்கர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஆயிரம் பேருந்துகளை இயக்க உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Comments