பொதுமக்கள் சுய தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க துருக்கி அதிபர் வலியுறுத்தல்
துருக்கியில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சுய தனிமைப்படுத்தலை (voluntary quarantine) கடைபிடிக்குமாறு அந்நாட்டு அதிபர் தயிப் எர்டோகன் (Tayyip Erdogan) அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், அத்தியாவசிய தேவைகளுக்காக இன்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
மற்ற நாடுகளை காட்டிலும் துருக்கியில் கொரோனா பரவும் வீதம் அதிகமாக உள்ளதால் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நகரங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து குறைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவைப்படும் பட்சத்தில் 30 நகரங்களில் சிறப்பு முகாம்கள் (pandemic councils) அமைக்கப்படும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.
Comments