அரசின் அறிவுறுத்தலை மீறி வழக்கம்போல் வெளியில் சுற்றிதிரிந்த ஜப்பான் மக்கள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா அச்சமின்றி பலரும் வெளியில் சுற்றிதிரிவதால் கவலை தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, நோயின் தாக்கத்தை உணர்ந்து மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 12ம் தேதி வரை மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு டோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்கே உத்தரவிட்டிருந்தார்.
செர்ரி பூக்கள் பூத்துக்குலுங்குவதை பார்க்க மக்கள் யாரும் கூட வேண்டாம் என்றும் அடுத்த ஆண்டும் செர்ரி பூக்கள் பூக்கும் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதை பொருட்படுத்தாமல் மக்கள் பலரும் வெளியில் சென்று தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments