வைட்டமின் - சி உணவுகளை சாப்பிட மக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

0 2701

ஊரடங்கு அமலில் இருப்பதால், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல்  இருக்கும் மக்கள், ஆரோக்கியமாக வாழ, வைட்டமின் - சி உணவுகளை சாப்பிடுமாறு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தி உள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழலில், மன வலிமையுடன் இருக்க , ஒவ்வொருவரும் யோகா கற்றுக்கொள்வது நல்லது என யோசனை தெரிவித்தார்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,

கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் குறிப்பிட் டார். காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. வேலு மணி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments