இந்தியாவில் கொரோனாவை பரப்பும் வைரசின் முதல் படங்கள் வெளியீடு

0 8973

இந்தியாவில் கொரோனாவை பரப்பும் வைரசின் முதல் படங்கள் புனே National Institute of Virology விஞ்ஞானிகளால், டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கி இமேஜிங்கைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளன.

கடந்த ஜனவரி 30 ஆம் தேதி இந்தியாவில், முதலாவது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அந்த நோயாளியின் தொண்டைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட திரவ மாதிரி ஆய்வு செய்யப்பட்டு, வைரசின் தோற்றம் உள்ளிட்ட விவரங்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்திய நோயாளியை தாக்கிய வைரசின் மரபணு வரிசைமுறை,(Genetic Order) சீனாவின் ஊகானில் பரவிய வைரஸுடன் 99.98 சதவீதம் பொருந்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் கிரீடம் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது.

கொரோனா என்றால் லத்தீன் மொழியில் கிரீடம் என பொருள் என்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments