இன்போசிஸ் அறக்கட்டளை சார்பில் தக்ஷின கன்னடா மாவட்ட நிர்வாகத்துக்கு மருத்துவ உதவி

0 1324

இன்போசிஸ் அறக்கட்டளை சார்பில் 28 லட்ச ரூபாய் மதிப்பிலான முக்கிய மருந்து பொருட்கள் கர்நாடக மாநிலம் மங்களுருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மங்களூரு காவல் ஆணையர் பி.எஸ்.ஹர்ஷா, தக்ஷின கன்னடா மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தியை தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், அடுத்த 36 மணி நேரத்திற்குள் மருத்துவ உதவிகள் கிடைக்கப்பெற்றதாவும் தெரிவித்துள்ளார்.

விரைந்து மருந்துகளை அனுப்பி வைத்தமைக்காக சுதாமூர்த்தி உள்ளிட்ட இன்போசிஸ் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments